ترجمة سورة الرّوم

الترجمة التاميلية - عمر شريف

ترجمة معاني سورة الرّوم باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف.

அலிஃப் லாம் மீம்.
(பூமியின் கீழ்ப் பகுதியில்) ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
(ஷாம் தேசமாகிய) பூமியின் கீழ்ப் பகுதியில் (ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர்). அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் (விரைவில் தங்கள் எதிரிகளை) அவர்கள் தோற்கடிப்பார்கள். (-வெற்றிகொள்வார்கள்.)
சில ஆண்டுகளில் (வெற்றிபெறுவார்கள்). (இதற்கு) முன்னரும் (இதற்கு) பின்னரும் அல்லாஹ்விற்கே அதிகாரம் உரியது. (ஆகவே, அவன் நாடியவர்களுக்கு வெற்றி அளிக்கிறான்.) அந்நாளில் அல்லாஹ்வின் உதவியால் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
(அந்நாளில்) அல்லாஹ்வின் உதவியால் (நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்). அவன், தான் நாடியவர்களுக்கு உதவுகின்றான். அவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.
அல்லாஹ் (இதை) வாக்களிக்கின்றான். அல்லாஹ் தனது வாக்கை மாற்ற மாட்டான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் வெளிரங்கத்தைத்தான் அறிவார்கள். அவர்கள்தான் மறுமையைப் பற்றி கவனமற்றவர்கள்.
அவர்கள் தங்களைத் தாமே சிந்தித்து பார்க்க மாட்டார்களா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அந்த இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றையும் உண்மையான காரியத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர படைக்கவில்லை. நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்தான்.
இவர்கள் பூமியில் பயணிக்க வேண்டாமா? தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்ப்பார்களே. இவர்களை விட பலத்தால் அவர்கள் கடுமையானவர்களாக இருந்தார்கள். பூமியை உழுதார்கள். இன்னும், இவர்கள் அதை செழிப்பாக்கியதைவிட அதிகமாக அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள். இன்னும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுடைய தூதர்கள் வந்தனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
பிறகு, தீமை செய்தவர்களின் முடிவு மிக தீயதாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பொய்ப்பித்தனர். இன்னும், அவற்றை பரிகாசம் செய்பவர்களாக இருந்தனர்.
அல்லாஹ்தான் படைப்புகளை தொடக்கமாக படைக்கிறான். பிறகு, அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான். பிறகு, அவனிடமே, நீங்கள் மீண்டும் கொண்டுவரப்படுவீர்கள்.
இன்னும் மறுமை நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள் பெரும்சிரமப்படுவார்கள்.
வர்களுக்கு அவர்களுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் தங்கள் நண்பர்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
வர்களுக்கு அவர்களுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் தங்கள் நண்பர்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்கள் (சொர்க்கத்) தோட்டத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்.
ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ, நமது வசனங்களையும் மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அவர்கள் (நரக) தண்டனைக்கு கொண்டு வரப்படுவார்கள்.
ஆகவே, நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும் (-சூரியன் மறைந்த பின்னரும்) காலைப்பொழுதை அடையும் போதும் (சூரியன் உதிக்கும் முன்னரும் -மஃரிபு மற்றும் ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றி) அல்லாஹ்வை துதியுங்கள்.
வானங்களிலும் பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. இன்னும், மாலையிலும் நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும் (அல்லாஹ்வை துதியுங்கள்).
அவன், இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளியாக்குகின்றான்; உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளியாக்குகின்றான். பூமியை -அது இறந்த பின்னர்- உயிர்ப்பிக்கின்றான். இவ்வாறே நீங்களும் (பூமியிலிருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவீர்கள்.
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் அவன் உங்களை (உங்கள் மூல பிதாவை) மண்ணிலிருந்து படைத்தது. பிறகு, (அவரின் சந்ததிகளாகிய) நீங்களோ மனிதர்களாக (பூமியில் உணவைத்தேடி பல இடங்களுக்கு) பிரிந்து செல்கிறீர்கள்.
அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளைப் படைத்தது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக (அவர்களைப் படைத்தான்). உங்களுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். நிச்சயமாக சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
(அவன்) வானங்களையும் பூமியையும் படைத்ததும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் வேறுபட்டு இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். நிச்சயமாக இதில் கல்விமான்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் நீங்கள் இரவிலும் பகலிலும் தூங்குவதும் அவனுடைய அருளிலிருந்து நீங்கள் தேடுவதும். நிச்சயமாக (உபதேசங்களை) செவியேற்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
அவனுடைய அத்தாட்சிகளில் இருந்து, அவன் உங்களுக்கு மின்னலை பயமாகவும் ஆசையாகவும் காட்டுகின்றான். இன்னும், வானத்திலிருந்து மழையை இறக்குகின்றான். அதன் மூலம் பூமியை -அது மரணித்த பின்னர்- உயிர்ப்பிக்கின்றான். நிச்சயமாக இதில் சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் வானமும் பூமியும் அவனுடைய கட்டளையின்படி (அவற்றுக்குரிய இடத்தில் நிலையாக) நிற்பது. பிறகு, அவன் உங்களை பூமியிலிருந்து ஒருமுறை அழைத்தால் அப்போது நீங்கள் (அதிலிருந்து) வெளியேறுவீர்கள்.
வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே உரியவர்கள். எல்லோரும் அவனுக்கே (வாழ்விலும் சாவிலும் உயிர்த்தெழுவதிலும்) பணிந்து நடக்கின்றனர். (அவனது விதியை அவர்கள் மீற முடியாது)
அவன்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கின்றான். பிறகு, (அவை அழிந்த பின்னர்) அவன் அவற்றை மீண்டும் படைக்கின்றான். அது அவனுக்கு மிக இலகுவானதே. வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்த தன்மைகள் அவனுக்கே உரியன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் உங்களுக்கு உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களில் (-உங்கள் அடிமைகளில்) பங்காளிகள் யாரும் இருந்து, நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக ஆகிவிட்டீர்களா? (அப்படி இல்லையே!) அவர்களை (-உங்களுக்கு நாம் கொடுத்த செல்வத்தில் உங்கள் அடிமைகளை உங்களுடன் சேர்த்துக் கொள்ள) நீங்கள் பயப்படுகிறீர்கள் -(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்) உங்களை -(உங்களில் ஒருவர் மற்றவர் தனது சொத்தில் பங்காளியாக ஆகுவதை) பயப்படுவது போன்று. (சுதந்திரமான பங்காளிகளை பயப்படுவது போல நீங்கள் உங்கள் அடிமைகளையும் பயப்படுகிறீர்கள், அவர்களை கூட்டாக்கிக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாதென்று. ஆகவே, அல்லாஹ் எப்படி தனது அடியார்களை தனக்கு சொந்தமானவற்றில் கூட்டாக்கிக் கொள்வான்? அவர்களுக்கு அவனுடன் கூட்டாக எத்தகுதியும் இல்லையே!) சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
மாறாக, அநியாயக்காரர்கள் கல்வி அறிவு இன்றி தங்கள் மன இச்சைகளை பின்பற்றுகின்றனர். அல்லாஹ் எவரை வழிக்கெடுத்தானோ அவரை யார் நேர்வழி செலுத்துவார்? அவர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.
ஆகவே, (நபியே! நீர் இஸ்லாமிய கொள்கையில்) உறுதியுடையவராக உமது முகத்தை(யும் உமது உம்மத்தின் முகங்களையும் அந்த) மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அது. அதன் மீது தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படைப்பை (தீனை) மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக (இருங்கள்). இன்னும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும், தொழுகையை நிறைவேற்றுங்கள். இணைவைப்பவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
தங்களது மார்க்கத்தை பிரித்து பல பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
மக்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தங்கள் இறைவனை -அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக- அழைக்கின்றனர். பிறகு, அவன் தன் புறத்திலிருந்து அவர்களுக்கு (தனது) அருளை சுவைக்க வைத்தால் அப்போது அவர்களில் ஒரு சாரார் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கின்றனர்.
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கின்றனர்). (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! (விரைவில் உங்கள் இறைவனிடம் நீங்கள் வரும்போது உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள்.
(அவர்களின் இணைவைப்புக்கு) அவர்கள் மீது நாம் ஓர் ஆதாரத்தை இறக்கினோமா? அவர்கள் எதை அவனுக்கு இணைவைப்பவர்களாக இருந்தார்களோ அதைப் பற்றி (அது சரி என்று) அது (-அந்த ஆதாரம்) பேசுகிறதா?
மக்களுக்கு நாம் (நமது) அருளை சுவைக்க வைத்தால் அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றினால் அவர்களை ஒரு தீமை அடைந்தால் அப்போது அவர்கள் நிராசையடைந்து விடுகின்றனர்.
இவர்கள் பார்க்க வேண்டாமா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகின்றான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்குகின்றான். நிச்சயமாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஆகவே, உறவினருக்கு அவருடைய உரிமையையும் வறியவருக்கும் வழிப்போக்கருக்கும் (அவரவர்களுடைய உரிமைகளையும்) கொடுப்பீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுதான் சிறந்ததாகும். இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
மக்களின் செல்வங்களில் வளர்ச்சி காணுவதற்காக (பிரதிபலனை எதிர்பார்த்து) அன்பளிப்புகளிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ அது அல்லாஹ்விடம் வளர்ச்சி காணாது. அல்லாஹ்வின் முகத்தை நீங்கள் நாடியவர்களாக தர்மங்களிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ (அதுதான் வளர்ச்சி அடையும். அப்படி கொடுக்கின்ற) அவர்கள்தான் (தங்கள் செல்வங்களையும் நன்மைகளையும்) பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்.
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு, அவன் உங்களுக்கு உணவளித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் (-இந்தக் காரியங்களில்) எதையும் செய்கின்றவர் உங்கள் தெய்வங்களில் இருக்கின்றாரா? அவன் (-அல்லாஹ்) மிக பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
தரையிலும் கடலிலும் (நகரங்களிலும் கிராமங்களிலும்) பாவம் பெருகி விட்டது. மக்களின் கரங்கள் செய்தவற்றினால் (அநியாயங்கள் அதிகரித்து விட்டன). இறுதியாக, அவர்கள் செய்தவற்றின் (-அவர்களின் பாவங்களின்) சிலவற்றை (-அதற்குரிய தண்டனையை) அவர்களுக்கு சுவைக்க வைப்போம்- அவர்கள் (உண்மையின் பக்கம்) திரும்புவதற்காக.
(நபியே! இணை வைப்பவர்களை நோக்கி) கூறுவீராக! பூமியில் பயணியுங்கள். (உங்களுக்கு) முன்னிருந்தவர்களுடைய முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் இணை வைப்பவர்களாக இருந்தனர்.
ஆக, (நபியே!) அதை தடுக்க முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன்னர் உமது முகத்தை நேரான மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (-மக்கள் இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள்.
யார் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவர் மீதுதான் கேடாக முடியும். எவர்கள் நன்மை செய்வார்களோ அவர்கள் தங்களுக்குத்தான் (சொர்க்கத்தில் சொகுசான படுக்கைகளை) விரித்துக் கொள்கிறார்கள்.
இறுதியாக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் தன் அருளிலிருந்து கூலி கொடுப்பான். (மேலும், பாவிகளுக்கு தண்டனை கொடுப்பான்). நிச்சயமாக அவன் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.
இன்னும், காற்றுகளை (-மழையை) நற்செய்தி தரக்கூடியவையாக அவன் அனுப்புவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும் தனது அருளை (-மழையை) உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும் கப்பல்கள் அவனுடைய கட்டளையின்படி (கடலில்) செல்வதற்கும் அவனது அருளிலிருந்து நீங்கள் (-வாழ்வாதாரத்தை) தேடுவதற்கும் நீங்கள் நன்றி செலுத்துவதற்கும் (அவன் உங்களுக்கு காற்றுகளை அனுப்புகின்றான்).
திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களுடைய மக்களுக்கு நாம் அனுப்பினோம். அவர்களிடம் அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர். ஆகவே, குற்றமிழைத்தவர்களிடம் நாம் பழிவாங்கினோம். (தூதர்களை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் உதவினோம்.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.
அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகின்றான். அவை மேகங்களை கிளப்புகின்றன. அவன் அவற்றை வானத்தில் தான் நாடியவாறு பரப்புகின்றான். இன்னும், அவற்றை பல துண்டுகளாக அவன் மாற்றுகின்றான். ஆகவே, மழையை -அது அவற்றுக்கு இடையிலிருந்து வெளியேறக்கூடியதாக- நீர் பார்க்கிறீர். அதை தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அவன் அதை அடையச் செய்தால், அப்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் அது (-மழை) அவர்கள் மீது இறக்கப்படுவதற்கு முன்னர் நிராசையடைந்தவர்களாக இருந்தனர்.
ஆக, அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களைப் பார்ப்பீராக! பூமியை அது மரணித்த பின்னர் அவன் எப்படி உயிர்ப்பிக்கின்றான் (என்பதை கவனியுங்கள்)! நிச்சயமாக அவன்தான் இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
நாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது அவர்களது விளைச்சலை அழித்து விட்ட பின்னர்) அதை (-அந்த விளைச்சலை) அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அதற்குப் பின்னர் (-அழிந்த பின்னர்) அவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றவர்களாக ஆகிவிடுகின்றனர்.
ஆகவே, (நபியே!) நிச்சயமாக நீர் இறந்தவர்களுக்கு (உமது அழைப்பை) செவியுறச் செய்ய முடியாது. இன்னும் நீர் (உமது) அழைப்பை செவிடர்களுக்கும் செவியுறச் செய்ய முடியாது அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்.
குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து (மீட்டெடுத்து அவர்களை) நீர் நேர்வழி செலுத்துபவர் அல்லர். நமது வசனங்களை நம்பிக்கை கொள்கின்றவர்களைத் தவிர மற்றவர்களை நீர் செவியுறச் செய்ய முடியாது. அவர்கள்தான் (-நம்பிக்கை கொள்பவர்கள்தான் நமது கட்டளைகளுக்கு)முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்.
அல்லாஹ்தான் உங்களை பலவீனமான ஒன்றிலிருந்து (-இந்திரியத் திலிருந்து) படைத்தான். பிறகு, பலவீனத்திற்கு பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பிறகு, பலத்திற்கு பின்னர் பலவீனத்தையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன் தான் நாடுவதை படைக்கிறான். அவன்தான் மிக்க அறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.
மறுமை நாள் நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள், “தாங்கள் சில மணி நேரமே அன்றி (மண்ணறையில்) தங்கவில்லை” என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறுதான் அவர்கள் (உலகத்தில் வாழும் போதும்) பொய் சொல்பவர்களாக இருந்தார்கள்.
கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை திட்டவட்டமாக தங்கினீர்கள். இதோ எழுப்பப்படுகின்ற (அந்த) நாள் (வந்து விட்டது). என்றாலும் நீங்கள் அறியாதவர்களாக இருந்தீர்கள்.
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்களின் மன்னிப்புக் கோருதல் பலனளிக்காது. இன்னும், (அல்லாஹ்வை) திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது.
இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக மக்களுக்கு விவரித்துள்ளோம். நீர் அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்தால் திட்டமாக நிராகரித்தவர்கள் கூறுவார்கள்: “(முஹம்மதை நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் பொய்யர்களே தவிர வேறில்லை”.
இவ்வாறுதான், அறியாதவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.
ஆகவே, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானதே! (இறையத்தாட்சியை) உறுதிகொள்ளாதவர்கள் உம்மை (-உமது பொறுமையை) இலேசாக கருதிவிட வேண்டாம். (பின்னர் உமது தீனிலிருந்து உம்மை திருப்பிவிட அவர்கள் முயற்சி செய்துவிடவேண்டாம். அது அவர்களால் முடியாது.)
سورة الروم
معلومات السورة
الكتب
الفتاوى
الأقوال
التفسيرات

سورةُ (الرُّومِ) من السُّوَر المكية، وهي السورة الوحيدة التي ذُكِر فيها (الرُّومُ)؛ ولهذا سُمِّيت بهذا الاسم، وقد اشتمَلتْ هذه السورة الكريمة على الإخبارِ بغيبِ المستقبَل؛ من أن (الرُّومَ) سيكونون غالبين بعد أن كانوا مغلوبين، وفي ذلك تأكيدٌ لصِدْقِ النبي صلى الله عليه وسلم، ومقصودُ السورة عظيم؛ ألا وهو: ردُّ الأمر كلِّه لله، مِن قبلُ ومِن بعدُ؛ مما يدعو كلَّ مؤمن إلى صدقِ التوكل عليه، والالتجاء إليه، كما صح عن النبي صلى الله عليه وسلم قراءتُه لها في الفجر.

ترتيبها المصحفي
30
نوعها
مكية
ألفاظها
817
ترتيب نزولها
84
العد المدني الأول
60
العد المدني الأخير
59
العد البصري
60
العد الكوفي
60
العد الشامي
60

* سورةُ (الرُّومِ):

سُمِّيت سورةُ (الرُّومِ) بذلك؛ لأنه ورَد فيها ذِكْرُ (الرُّومِ)، ولم يَرِدْ في غيرها من القرآن.

* أُثِرَ عن النبي صلى الله عليه وسلم أنه قرأ سورةَ (الرُّومِ) في الفجرِ:

عن أبي مالكٍ الأغَرِّ المُزَنيِّ رضي الله عنه، قال: «صلَّيْتُ مع النبيِّ ﷺ، فقرَأَ سورةَ الرُّومِ في الصُّبْحِ». أخرجه الطبراني (٨٨٤).

اشتمَلتْ سورة (الرُّومِ) على عِدَّةِ موضوعات؛ وهي:

1. الإخبار عن غيب المستقبَل (١-٧).

2. التفكير في مخلوقات الله يدل على وجوده، وهو الذي يُعِيد خَلْقَ الإنسان يوم القيامة (٨-١٦).

3. تنزيه الله وَحْده، وأدلة وجوده وربوبيَّتِه سبحانه وتعالى (١٧-٢٧).

4. إثبات الوَحْدانية، وبطلان الشِّرك، والأمر باتباع الإسلام (٢٨-٣٢).

5. لجوء الناس إلى الله عند الشدائد، وإعراضهم عند زوالها (٣٣-٣٧).

6. الحث على الإنفاق لذوي الأرحام، والتحذير من المال الحرام (٣٨-٤٠).

7. جزاء المفسدين والمؤمنين (٤١-٤٥).

8. الرِّياح والأمطار دالة على قدرة الله تعالى، وتشبيهُ الكفار بالموتى (٤٦-٥٣).

9. أطوار حياة الإنسان، قَسَمُ المجرمين في الآخرة (٥٤-٥٧).

10. الأمثال للعِبْرة، وأمر النبي صلى الله عليه وسلم بالصبر على الدعوة (٥٨-٦٠).

ينظر: "التفسير الموضوعي لسور القرآن الكريم" لمجموعة من العلماء (6 /4).

إثباتُ الأمرِ كلِّه لله عزَّ وجلَّ؛ فهو صاحب الحقِّ، المتصفُ بالرُّبوبية والألوهية وكلِّ صفات الكمال، والقادرُ على كل شيء، فيأتي البعثُ، ونصرُ أوليائه، وخِذْلان أعدائه؛ وهذا هو المقصود بالذات، واسمُ السورة واضح فيه؛ بما كان من السبب في نصرِ (الرُّوم) من الوعد الصادق، والسرِّ المكتوم، ومن أعظم ما اشتملت عليه: التصريحُ بأن الإسلامَ دِينٌ فطَر اللهُ الناسَ عليه، وأن مَن ابتغى غيرَه دِينًا فقد حاول تبديلَ ما خلَق الله، وأنَّى له ذلك؟!

ينظر: "مصاعد النظر للإشراف على مقاصد السور" للبقاعي (2 /349)، "التحرير والتنوير" لابن عاشور (21 /41).